கோப்பாய் வாள்வெட்டு: அயல் வீட்டாரே கூலிப்படையை அமர்த்தி தாக்குதலை மேற்கொண்டனர்! பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிப்பு!

யாழ். கோப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்து வாள்வெட்டுக் குழு மேற்கொண்ட தாக்குதலில் முதியவர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, கோப்பாய் பூதர்மடத்தடியை சேர்ந்த 54 வயதுடைய கதிர்காமநாதன் குணரட்ணசிங்கம் என்பவரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்படுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கூரிய ஆயுதங்களுடன் வீடொன்றினுள் புகுந்த கும்பல், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொருக்கியதுடன், வீட்டின் மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த தாக்குதலில், வீட்டில் இருந்த முதியவர் படுகாயம் அடைந்துள்ளார்.

குறித்த வீட்டுக்கு அருகில் வசிக்கும் இளைஞருடன், வீட்டில் வசிப்போருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்தே , குறித்த இளைஞன் கூலிக்கு வன்முறை கும்பலை ஏற்படுத்தி தம் மீது தாக்குதலை நடாத்தியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply