
ஊருகஸ்மங் சந்தி – கொரக்கின பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த மரணங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த 38 வயதுடைய பெண்ணும், 39 வயது ஆணும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் உயிரிழந்த ஆண், இதற்கு முன் மேலும் இருவரை திருமணம் செய்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனினும், தற்கொலை செய்து உயிரிழந்த இருவரும் கடந்த ஒன்றரை வருடமாக இணைந்து வாழ்ந்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் ஊருகஸ்மங் சந்தி பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.





