இலங்கையில் சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்ற சீன நாட்டவர்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை போர்ட் சிட்டி வளாகத்தில் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

சினோபார்ம் தடுப்பூசியை மூன்றாவது டோஸ் ‘பூஸ்டர்’ தடுப்பூசியாக இவர்கள் பெற்றுள்ளார்கள் என்றும் இது இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசியின் முதல் வெளியீடு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனப் பிரஜைகளே இலங்கையில் சினோபார்ம் தடுப்பூசியை முதலில் பெற்றனர் என குறிப்பிடப்படுகின்றது.
அந்த வகையில் சீனர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி இயக்கம் இன்றும் நாளையும் நடைபெறும் என்று கொழும்பு மாநகர சபையின் பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர். டினு குருகே தெரிவித்தார்.
அத்தோடு , போர்ட் சிட்டியில் முதல் மற்றும் இரண்டாவது டோஸைப் பெற்றவர்கள் மூன்றாவது டோஸைப் பெறலாம் என்றும் குறிப்பிட்டார்.






