எதிர்வரும் திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் தொடர் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இச் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், ஆசிரியர்களின் போராட்டத்தை ஒடுக்கவும், கோரிக்கைகளுக்கு அரசு உரிய முறையில் பதிலளிக்காதமையையும் கண்டித்தும் இப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
திங்கட்கிழமை கடமைக்கு சமூகமளிக்கவுள்ளதாகவும், பிற்பகல் 1.30 இற்குப் பின்னர் போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.






