உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களில் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளிற்காக நாளை ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் பல இடங்களில் மின்சார தடை ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் வவுனியா பிராந்திய காரியாலத்தினர் தெரிவித்துள்ளனர்.
செட்டிக்குளம் மற்றும் வவுனியா வடக்கு பகுதியைத் தவிர்ந்த மாவட்டத்தின் ஏனைய அனைத்து பகுதிகளிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்சாரம் தடைப்படவுள்ளது.
இந்த நேரங்களில் வைத்தியசாலை மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கான பொது இடங்கள் முன்கூட்டியே மின் தடையை நிவர்த்தி செய்யக்கூடிய மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.
எனவே, மக்கள் அனைவரும் மின்தடையையடுத்து தேவையான முன்னாயத்த நடவடிக்கைளை எடுக்குமாறு இலங்கை மின்சார சபையின் வவுனியா பிராந்திய காரியாலத்தினர் தெரிவித்துள்ளனர்.






