யாழ். பொலிஸாரால் துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணி முன்னெடுப்பு!

யாழ்ப்பாண பொலிஸாரால் துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் செயற்பாடு இன்று மாலை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில் துவிச்சக்கர வண்டியில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் முகமாக, இரவில் துவிச்சக்கர வண்டியில் பயணிக்கும்போது பின்னால் வரும் வாகனத்திற்கு துவிச்சக்கர வண்டி தெரியத்தக்கதாக ஒளியூட்டப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பிராந்தியத்திற்கான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உஜித் லியனகேயின் வழிகாட்டுதலின் கீழ் குறித்த திட்டம் யாழ். பண்ணை சுற்றுவட்டத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில், யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் போக்குவரத்து பொலிஸார் இணைந்து துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணி முன்னெடுக்கப்பட்டது.

ffna

Leave a Reply