
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்காக தெரிவு செய்யப்பட்ட அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இன்று (25) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட விஜயமாக இலங்கைக்கு வரும் அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்துவர் என்றும் இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத பங்குகளை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கான உடன்படிக்கை செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.
இந்நிலையில் இலங்கையின் துறைமுகங்கள், மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொடர்பான திட்டங்களில் முதலிடுவதற்கு அதானி ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கும் போது இந்த துறைகளில் சாத்தியமான திட்டங்கள் குறித்து அதானி விவாதிப்பார் என்றும் இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.





