முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு கைவேலிப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர், இரண்டு உழவு இயந்திரங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களும், உழவு இயந்திரங்களும் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிசார் குறித்த நபர்களை முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.







