ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு- பயிலுனர் நியமனங்கள் வழங்கி வைப்பு

வவுனியா – முல்லைத்தீவு வெலிஓயா பகுதிகளை உள்ளடக்கிய இளைஞர் யுவதிகளுக்கு, ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் பலநோக்கு அபிவிருத்தி உதவியாளர் பயிலுனர் நியமனங்கள் இன்று (25) வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு, மன்னார் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான கே.காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றது.

வவுனியாவைச் சேர்ந்த 39 பேருக்கும் முல்லைத்தீவு வெலிஓயா பகுதியை சேர்ந்த 15 பேருமாக 54 பேருக்கு நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நியமனக்கடிதமானது,18.10.2021 ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் 25 ஆம் திகதியான இன்று வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் வவுனியா நகரசபை உப தலைவர் சுந்தரம் குமாரசாமி உட்பட பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தினால் வழங்கப்பட்ட நியமனக்கடித்தில், திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் மகிந்த முத்தலிகே கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply