நனோ நைட்ரஜன் உர மோசடி: ஐக்கிய மக்கள் சக்தி புகார்!

இந்திய நனோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி தொடர்பில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

உரத்தை இறக்குமதி செய்வதற்காக அரசாங்கம் உள்ளுர் நிறுவனத்திற்கு 290 மில்லியன் ரூபா வழங்கிய போதிலும் இந்திய நிறுவனத்திற்கு உரத்தை இறக்குமதி செய்ததற்காக 90 மில்லியன் ரூபா மாத்திரம் செலுத்தப்பட்டுள்ளதுடன், 200 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 100,000 மெட்ரிக் தொன் உரம் கொண்டுவருவதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், அண்மைக்காலமாக 25,000 மெட்ரிக் தொன் உரம் மாத்திரமே கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த மோசடி தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply