கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன்இ கடந்த வாரம் இரண்டு நாட்கள் நாடாளுமன்றத்தின் சில இடங்களில் நடமாடியுள்ளார் என சி.சி.ரி.வி . காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எனினும்இ அவர் முகக்கவசம் அணிந்து சுகாதார சட்ட திட்டங்களை சரியாகப் பின்பற்றி நடந்துக்கொண்டுள்ளதால்இ அவரால் நாடாளுமன்றத்துக்குப் பெரிய அச்சுறுத்தல் இல்லை எனவும் கூறியுள்ளார்.
அவர் நாடாளுமன்றத்துக்கு வந்த நேரத்தில் சில தமிழ்நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரமே பழகியுள்ளார்.
அதேவேளை. செல்வராசா கஜேந்திரன்இ இரண்டு கொரோனாத் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
கஜேந்திரனுக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்று முன்தினம் கண்டறியப்பட்டது.
அவர் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.






