ஐந்து உயிர்கள் கருகிய ராகலை தீவிபத்து- நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

ராகலை தீவிபத்து சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை வலப்பனை மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று நீதிவான் நீதிமன்ற நீதிவான் டி.ஆர்.எஸ்.ஜினதாச முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதே அவர் மேற்க்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

ராகலை தீவிபத்தில் உயிர் தப்பியிருந்த 27 வயதுடைய தங்கையா இரவீந்திரன் என்பவரை ராகலைப் பொலிஸார் இம்மாதம் 12ஆம் திகதி கைதுசெய்திருந்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட தங்கையா இரவீந்திரனை அன்றைய மாலை வலப்பனை பிரதேச மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ராகலைப் பொலிஸார் ஆஜர்படுத்தியிருந்தனர்.

இதையடுத்து இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

எனினும் சந்தேகநபர் தரப்பில் சட்டத்தரணிகள் எவரும் மன்றில் ஆஜராகவில்லை.

ஆனால், சந்தேகநபர் தொடர்பாக ராகலை குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸ் அதிகாரி ஆஜராகிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில் இந்த வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 8ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாகவும், அதுவரை சந்தேகநபரைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் இரசாயனப் பரிசோதனை அறிக்கை, மரண விசாரணை அறிக்கை, பிரேத பரிசோதணை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் அடுத்த வழக்கில் சமர்ப்பிக்க பொலிஸாருக்குக் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

Leave a Reply