திருகோணமலை எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில், டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்து விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை – இலிங்கநகர் சந்தியில் அமைந்துள்ள லங்கா IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெறுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக, திருகோணமலை தலைமைய காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் சோதனையிடப்பட்டது
இந்த நிலையில், குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எடுக்கப்பட்ட டீசல் மாதிரியினை, பரிசோதனை செய்வதற்காக பொலிஸார் எடுத்துச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்






