ஒரு சிலர் வாழ்வதற்காக எமது கடல் வளத்தை அழிக்கிறார்கள்! ச.சுகிர்தன்

ஒரு சிலர் வாழ்வதற்காக எங்கள் மண் வளத்தையும் கடல் வளத்தையும் அழிக்கப்பார்க்கிறார்கள் என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன்குற்றஞ் சாட்டியுள்ளார்.

குருநகரில் இன்று இடம்பெற்ற மீனவர்களின் போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,
வடக்கில் றோலர் தொழில் செய்வோர் பலர், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் வேறு தொழில் முயற்சியில் ஈடுபடுபவர்களே.

அதன்படி, தொடர்சியாக கடல் தொழிலில் ஈடுபடும் ஒரு சிலரே றோலர் வைத்துள்ளதோடு, அவர்கள் தங்கள் குடும்பத்தை போலவே கடலையும் நேசிப்பவராக உள்ளனர்.
எனினும், கடலை கொள்ளையடிக்க முதலீடு செய்தவர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள். அவர்களை கண்டு ஒருபோதும் நாங்கள் பயப்படபோவதும் இல்லை

குடத்தனையில் மணல் கொள்ளைக்கு எதிராக போராடிய நண்பன் கேதீஸை சுட்டுக் கொன்றதனை மறக்கவும் இல்லை அதற்கு பயந்து மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தாமல் பயந்து ஒதுங்கவும் இல்லை. ஆகவே எங்கள் போராட்டம் தொடரும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடலை நம்பி பல குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில், வடக்கில் உள்ள பல பண முதலைகள் சிலர் வாழ்வதற்காக எங்கள் மண் வளத்தையும் கடல் வளத்தையும் அழிப்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

உருவப்பொம்மை எங்களை சுட்டுப்போட்டாலும் எங்கள் வளங்களை அழிப்பவர்களிற்கு எதிராக போராடுவோம் என மேலும் தெரிவித்தார்.

Leave a Reply