
இந்தியாவின் கோடீஸ்வரரான அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டார்.
கௌதம் அதானியும் அவரின் குடும்பத்தின் சிலரும் இரண்டு தனியார் விமானங்களில் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அதானி குழுமம் கொழும்பு மேற்கு முனையத்தின் அபிவிருத்திக்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், அவர் இங்கு வருகை தந்துள்ளார்.
அவர், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் தொடர்பில்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் நேற்றுக் கலந்துரையாடினார்.
அதன் பின்னர் மன்னாருக்குச் சென்ற அவர், மன்னாரில் எண்ணெய்ப் படுகை உள்ளதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், அது பற்றி ஆராய்ந்து நடவடிக்கையில் இறங்கும் நோக்கில் தான் அங்கு சென்றாரா என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றது.
அவருடன் இராஜாங்க அமைச்சர் வி.சானக்க, இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் சஞ்சய மொஹாட்டால ஆகியோரும் மன்னாருக்குச் சென்றிருந்தனர்.
கடந்த 7 ஆம் திகதி போ்ப்பஸ் சஞ்சிகை வெளியிட்ட இந்தியாவின் செல்வந்த வர்த்தகர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் அதானி உள்ளார் என்ாது குறிப்பிடத்தக்கது.





