நாட்டில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி மேலும் 20 பேர் நேற்று உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,674 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, 30 வயதுக்கு உட்பட்ட எவரும் நேற்று உயிரிழக்கவில்லை எனவும், 30 – 59 வயதுக்கு இடைப்பட்ட 8 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 12 பேரும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், 30 – 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 5 ஆண்களும் 3 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்மோரில் 6 ஆண்களும் 6 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.






