பாடசாலைகளின் முன் 3ஆம் திகதி போராட்டம்!

அதிபர், ஆசிரியர்களின் சம்பள போராட்டத்தின் ஓர் அங்கமாக எதிர்வரும் 3ஆம் திகதி அனைத்துப் பாடசாலைகளின் முன்பாகவும் பெற்றோர்களை இணைத்து ஆர்ப்பாட்டமொன்றை நடத்த எதிர்பார்த்துள்ளோம் என்று ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

சம்பளப் பிரச்சினைக்கான தீர்வைக் கோரி
முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகளின் இரண்டாம் பாகத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். அந்த வகையில் சட்டப்படி வேலை செய்யும் நடவடிக்கை தொடரும்.

8 ஆயிரத்துக்கும் அதிகமான பாடசாலைகளுக்கு முன்பாக பெற்றோரை இணைத்து ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இந்த நடவடிக்கையில் கலந்துகொள்ளுமாறு பெற்றோருக்கு அழைப்பு விடுக்கிறோம். என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply