சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானம்

<!–

சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானம் – Athavan News

சாதாரண தரம் மற்றும் உயர் தரம் பரீட்சைகளுக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் வாரத்தில் இருந்து குறித்த வகுப்புக்களை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் கடைப்பிடிக்கப்படவேண்டிய சுகாதார வழிகாட்டுதல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply