கிளிநொச்சியில் அதிபர், ஆசிரியர்கள் இன்று பகல் 2 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் அதிபர், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், இன்று கிளிநொச்சியில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சம்பள முரண்பாடுகளை அரசாங்கம் தீர்த்து வைக்க வேண்டும் எனவும், சுபோதினி ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இப் போராட்டத்தை ஆசிரியர்கள் முன்னெடுத்தனர்.
இதன்போது, பல்வேறு கோசங்களை எழுப்பியிருந்ததுடன், பதாதைகளையும் ஏந்தியியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.








