பளையில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

வடமராட்சி, மாமுனையைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர், இத்தாவில் பளை பகுதியில் உள்ள அவரது உறவினரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

38 வயதுடைய ஆறுமுகம் ஞானக்குமார் எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று தனது சகோதரியின் வீட்டிற்கு சென்ற நிலையில், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பில், பளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், திடீர் மரணவிசாரணை, பீசிஆர் பரிசோதனை, உடற்கூற்று பரிசோதனை என்பன மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply