அநுராதபுரம், கொங்கெட்டியாவ பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் பயிலும் மூன்று வகுப்புகளைச் சேர்ந்த நான்கு மாணவர்களுக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, சுமார் 90 மாணவர்கள் அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
2, 3 மற்றும் 4ஆம் வகுப்புகளில் கல்வி பயிலும் நான்கு மாணவர்களுக்கே கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், மாணவர்கள் எவரும் அந்தப் பாடசாலைக்குச் சமூகமளிக்கவில்லை எனவும், ஆசிரியர்கள் மாத்திரமே கடமைக்குச் செல்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






