மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சைகள் மேற்கொள்ள தேவையான ஒரு தொகுதி வைத்திய உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
மன்னார் நட்புறவுச் சங்கம் – கனடா அமைப்பின் நிதி உதவியில் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் இவ் உபகரணங்கள் கையளிக்கப்பட்டுள்ளது.
நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம், கண்காணிப்பு திறை உட்பட சுமார் 12 லட்சம் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்கள் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், மன்னார் நட்புறவுச் சங்கம் – கனடா அமைப்பின் மன்னார் மாவட்ட நிர்வாக உறுப்பினர்களான திரு.ஜூட் பிகிறாடோ திரு.றொபட்பீரீஸ்,திரு.ஞானராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தர்மராஜ் வினோதனிடம் இவ் உபகரணங்களை கையளித்தனர்.







