புதுமுறிப்பு மற்றும் அக்கராயன் குளங்களில் இரால் குஞ்சுகள் விடுவிப்பு!

கிளிநொச்சி, புதுமுறிப்பு குளம் மற்றும் அக்கராயன்குளம் ஆகிய குளங்களில் இரால் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டுள்ளது.

புதுமுறிப்பு குளத்தில், வடக்கு மகாண சபையின் நிதி பங்களிப்பில் 75,000 குஞ்சுகளும், மெசிடோ நிறுவனத்தின் நிதி பங்களிப்பில் ஒரு லட்சம் இரால் குஞ்சுகளும் விடுவிக்கப்பட்டுள்ளது,

இதேவேளை, அக்கராயன்குளத்தில் வடக்கு மகாண சபையின் நிதி பங்களிப்பில் ஒரு லட்சம் குஞ்சுகளும், மெசிடோ நிறுவனத்தின் நிதி பங்களிப்பில் ஒருலட்சம் இரால் குஞ்சுகளும் விடுவிக்கப்பட்டுள்ளது

இந்நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் சிறிமோகன், யாழ்ப்பாணம், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட தேசிய நீர் உயிரின வளர்ப்பு அதிகாரசபை உத்தியோகத்தர் கு.சங்கீதன், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் இயக்குனர் யாட்சன் விகிராடோ, நன்னீர் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply