கொள்ளையடித்தவற்றை கொண்டு வந்தாவது, பல்வேறு வழிகளில் சேர்ந்த சொத்துக்களை அரசுடமையாக்கியாவது, அரச மற்றும் தனியார் பிரிவு ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுக்க வேண்டும் என தேசிய தொழிற்சங்க மையத்தின் தலைவர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், எதிர்வரும் வரவு – செலவு திட்டத்தில் 10 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டியுள்ளது என நாம் அரசாங்கத்திற்கு தெரிவிக்கிறோம்.
அரச, தனியார் பிரிவினருக்கும் மற்றும் தோட்ட தொழிலாளர்களுக்கும் இந்த 10 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு கட்டாயமாக வழங்கப்பட வேண்டும்.
அதேபோல், தற்போது பணியில் இல்லாத ஓய்வூதியத்தில் தமது வாழ்க்கையை கொண்டு செல்லும் ஓய்வூதியகாரர்களுக்கும் இந்த சம்பள அதிகரிப்பு அத்தியாவசியமாகும்.
இன்றில் இருந்து வரவு – செலவுத் திட்டம் வரை 10 ஆயிரம் கிடைக்கும் என உறுதியளிக்கும் வரை தொடர்ச்சியான எதிர்ப்பு நடவடிக்கையை நாடு முழுவதுவும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையடித்தவற்றை கொண்டு வந்தாவது, பல்வேறு வழிகளில் சேர்ந்த சொத்துக்களை அரசுடமையாக்கியாவது, எதிர்வரும் 2, 3, 4 வருடங்கள் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்றால் இந்த கோரிக்கையை கட்டாயம் அரசாங்கம் நிறைவேற்ற வேண்டி வரும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.






