திருகோணமலை, தம்பலாகாமம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டிய 10 பேரை, அடுத்த மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
தம்பலாகாமம், முள்ளிப்பொத்தானை, குளியாப்பிட்டி, வத்தளை, குருணாகல் மற்றும் அம்பாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 46, 48, 40, 38, 41, 55, 38, 54, 32 மற்றும் 43 வயதுடைய பத்துப் பேரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தம்பலாகாமம் ஐயனார் தீவு பகுதியில் புதையல் தோண்டிய நிலையில் தம்பலாகாமம் பொலிஸார் இவர்களை கைது செய்தனர்.
சந்தேக நபர்களிடமிருந்து, புதையலை கண்டறிவதற்கான ஸ்கேன் இயந்திரம், மண்வெட்டி, கூடைகள், பிக்காசு இயந்திரங்கள் போன்றவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
தம்பலாகாமம் பொலிஸார் இவர்களை, கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.






