இந்திய தூதுவருக்கும் சம்பந்தனிற்கும் இடையில் அவசர சந்திப்பு!

இந்தியத் தூதுவர் கோபால் பால்கிலே மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கும் இடையில் இன்று மாலை அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இரா.சம்பந்தனின் அலுவலகத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பில், தூதுவர் கோபால் பால்கிலேயுடன் அவரது அதிகாரியும், இரா.சம்பந்தனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பங்குகொண்டிருந்தனர்.

சந்திப்பின் நிறைவில் தீபாவளி வாழ்த்துக்களை பரிமாறி நிறைவு செய்து கொண்டனர் எனத் தெரியவருகின்றது.

Leave a Reply