கொரோனாத் தொற்றுக்குள்ளான பத்துப் பேர் நேற்று உயிரிழந்ததாக அரசாங்கத் தகவல் திணைக்களம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13, 706 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 415 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நாட்டில் இதுவரை தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 539,275 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து 302 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 512,165 ஆக அதிகரித்துள்ளது.






