வவுனியாவில் தீவிரமடையும் கொரோனா: இன்று 44 பேருக்கு தொற்றுறுதி!

வவுனியாவில் 44 பேர் உட்பட வடக்கில் இன்று 47 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 192 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் இடம்பெற்றிருந்தன.

அதன்போதே, குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 44 பேர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர், யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒருவர் என தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Leave a Reply