கொரோனாத் தொற்று உறுதியான நிலையில், காணாமல் போயிருந்த கொத்மலை பொலிஸ் உத்தியோகத்தர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பூண்டுலோயா பகுதியைச் சேர்ந்த 57 வயதான கொத்மலை பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கம்பளை ஆதார வைத்தியசாலையின் சுமார் 40 அடி உயரமான நீர்த்தாங்கியிலிருந்து வெளியேறிய துர்நாற்றத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
50 நாட்களுக்கு முன்னர் கொரோனாத் தொற்று உறுதியான நிலையில், கம்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்த அவர் காணாமல்போய் இருந்தார்.
இந்நிலையில், இன்று அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதோடு, அவரது உறவினர்கள் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.






