வவுனியாவில் மர்மமான முறையில் இறந்த நல்லினமாடுகள்!

வவுனியா, புதிய சின்னக்குளம் பகுதியில் மர்மமான முறையில் பலியான நல்லினமாடுகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன.

நொச்சிமோட்டை பகுதியைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பாளரின் மூன்று பசு மற்றும் ஒரு நாம்பன் மாடு இரண்டு நாட்களிற்கு முன் மேச்சலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தன.

இந்நிலையில், நேற்று வயலுக்கு சென்ற விவசாயிகளால் மர்மமான முறையில் பலியான நான்கு மாடுகளை அவதானித்துள்ளனர்.

அத்துடன், இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்களிற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, உரிமையாளரால் குறித்த சம்பவம் தொடர்பாக மாமடு பொலிஸில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த மாடுகள் வேட்டைக்காக பயன்படுத்தப்படும் சட்டவிரோத மின்சார இணைப்பில் அகப்பட்டு இறந்திருக்கலாம் என்ற நிலையில், மாமடு பொலிஸாரால் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த மாடுகள் சுமார் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply