கிளாஸ்கோ நகரை சென்றடைந்த ஜனாதிபதி

ஊழுP: 26 என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய இராச்சியம் நோக்கிப் புறப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷஇ ஸ்கொட்லாந்தின் க்லாஸ்கோ நகரைச் சென்றடைந்தார்.

அந்நாட்டு நேரப்படி நேற்று (30) பிற்பகல் 12.40 மணிக்கு கிலாஸ்கோ சர்வதேச விமான நிலையத்தைஇ

ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர்
அடைந்துள்ளனர்.

இந்த நிலையில்இ அவர்களை பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன அம்மையார் வரவேற்றுள்ளார்.ஜனாதிபதியுடன் இவ்விஜயத்தில்இ
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்இ சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரஇ சூரியசக்திஇ காற்று மற்றும் நீர்மின்சார உற்பத்தி கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்கஇ ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்கஇ வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும்இ இணைந்து கொண்டுள்ளனர்.

‘காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தின் தீர்மானமிக்க சந்தர்ப்பங்கள்’ என்று நடைபெறுகின்ற இம்மாநாட்டில்இ 197 நாடுகளின் அரச தலைவர்கள்இ அரச பிரதிநிதிகள்இ புத்திஜீவிகள்இ வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுமார் இருபத்தையாயிரம் பேர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த மாநாடுஇ இன்று (31) தொடக்கம் நவம்பர் 12 வரைஇ க்லாஸ்கோ நகரில் நடைபெறவுள்ளது.

நவம்பர் 01 மற்றும் 02ஆம் திகதிகள்இ உலகத் தலைவர்களின் மாநாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளைஇ ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெற்ற மாநாடுகளில்இ இதுவே மிகப் பெரிய மாநாடாகக் கருதப்படுகிறது.

Leave a Reply