யாழ்.போதனா வைத்தியசாலை விடுத்துள்ள அவசர கோரிக்கை

யாழ்.போதனா வைத்தியசாலையில்இ அணைந்தது வகை குருதிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கி அறிவித்துள்ளது.

இந்தநிலையில்இ குருதி கொடையாளர்கள் 0772105375 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்பு கொண்டு இரத்த தானம் வழங்க முன்வருமாறு இரத்த வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா தடுப்பூசியினை செலுத்திக்கொண்டவர்கள்இ செலுத்தப்பட்ட தினத்திலிருந்து ஒரு வார காலத்தின் பின்னர் இரத்ததானம் மேற்கொள்ள முடியுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இரத்ததானம் செய்து நான்கு மாதங்கள் பூர்த்தியானவர் மற்றும் புதிதாக இரத்ததானம் செய்யக் கூடியவர்கள் குருதி வழங்க முடியும்.

அதன்படிஇ அருகிலுள்ள இரத்த வங்கிகளுக்கு சென்று இரத்ததானம் செய்து குருதி தட்டுப்பாட்டினை கட்டுப்படுத்தி உயிர்களை பாதுகாக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply