புன்னைநீராவியில் அறநெறி பாடசாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா!

புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில், அறநெறி பாடசாலை அமைப்பதற்கான அடிக்கல் நேற்று முன்தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் நாட்டி வைக்கப்பட்டது.

மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி, சமூகநலம், பண்பாடு அறப்பணி மையத்தின் நிதிப் பங்களிப்புடன் இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்கள், கிராம அலுவலர் சமூர்த்தி உத்தியோகத்தர் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள், ஆதிபராசக்தி அறப்பணி மையத்தின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply