எனக்கு ஆலோசனை வழங்கவே ஞானசாரரை நியமித்தேன்! ஜனாதிபதி

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கொள்கை வரைபை உருவாக்குவதற்கான செயலணியின் தலைமைப் பதவி பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டமை தனக்கு ஆலோசனை வழங்குவதற்காகவே தவிர, நாட்டுக்கு நீதியை வழங்குவதற்காக அல்ல என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் சந்திப்பிலேயே அவர் இதனைக் தெரிவித்தார்.

மேலும், தான் செய்யும் செயல்கள் அனைத்துக்கும் கட்சித் தலைவர்களிடம் ஆலோசனை பெறச் சென்றால், தனக்கு தேவையான நண்பர்களைத் தெரிவு செய்வதற்கும் அவர்களிம் அனுமதி பெற வேண்டிய நிலை ஏற்படும்.

நீதி அமைச்சராக அலி சப்ரியை தெரிவு செய்த சந்தர்ப்பத்திலும் இவ்வாறு எதிர்ப்புகள் வந்தது எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

Leave a Reply