பிள்ளையான் மற்றும் அமல் போன்றோர் அரசை விட்டு வெளியேறுவார்களா – நிதான்சன்

கிழக்கில் திட்டமிட்ட குடியேற்றத்துக்கு ஆதரவு வழங்குகின்றனார்களா? ஆளும் தரப்பில் இருக்கும் பிள்ளையான் மற்றும் அமல் போன்றோர் – தமிழரசுக்கட்சி வாலிபர் மன்னணி துணைச்செயலாளர் அ.நிதான்சன்

தமிழ் மக்களுக்கான நிரந்தர அபிவிருத்தியோ அல்லது நிரந்தர தீர்வோ பெற்றுக் கொடுக்க பிள்ளையான், அமல் போன்றோரால் முடியுமா? அவ்வாறு முடியாவிட்டால் அரசை விட்டு வெளியேறும்படி சவால் விடுகின்றோம்.

இவ்வாறு இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபமுன்னணி உபசெயலாளர் அ.நிதான்சன் விடுத்த ஊடகஅறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கிழக்கில் தொடர்ச்சியாக தொல்லியல் எனும் போர்வையிலும் யுத்தத்தால் மட்டக்களப்பில் இருந்து இடம் பெயர்ந்த சிங்களவர்கள் எனும் அடிப்படையிலும் தமிழர்களின் பூர்வீக மண் சூறையாடப்படுகின்றது.

குறிப்பாக அம்பாறை மட்டக்களப்பு பிரதேசத்தில் திட்டமிட்டு மிகத் தீவிரமாக தமிழர்களின் இன விகிதாசாரம் மாற்றியமைக்கப்படுகின்றது.
இதுவரையில் அம்பாறையில் கனகர் கிராம மக்களுக்கு காணி கொடுக்கப்படவில்லை. மேலும் திருக்கோவில் பிரதேச எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் அரசாங்கத்தின் துணையோடு மண் கொள்ளை நடக்கின்றது.

மட்டகளப்பில் கோரகல்லிமடுவில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அனுசரணையோடு திட்டமிட்ட குடியேற்றத்துக்கு காணி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நம்பகமான செய்திகள் கிடைத்துள்ள.

இந்த அரசிற்கு முட்டுக் கொடுப்பதற்காக முஸ்லிம்களை நசுக்க வேண்டும் எனக் கூறி ஆட்சி பீடத்துக்கு வரத்துடித்து இனவாத அரசியல் செய்த தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியும்இவியாழேந்திரன் ஆகியோரும் அரசின் கைப்பாவையாகி உள்ளனர்.
கிழக்கில் முஸ்லிம் ஆக்கிரமிப்பு என்று குரல் கூச்சலிட்டவர்கள் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்துக்கு சாமரம் வீசி வரவேற்கின்றனர்.

இன்று நாடு பாதுகாப்பற்றதாக உள்ளது எனக் கூறி ஆட்சியை பிடித்தவர்கள் இன்று தமிழர்களை முற்றாக புறக்கணித்து ஒரு நாடு ஒரு சட்டம் செயலணி முஸ்லிம் சிங்களர்களை மாத்திரம் சேர்த்து அமைத்துள்ளனர்.

இதனை பேச முடியாதவர்களாக இன்று பிள்ளையான் அவர்களும் அவர்களது சகாக்களும் உள்ளனர் ஏனெனில் இவர்கள் கடந்த காலத்தில் செய்த ஊழல் குற்றச் செயல்கள் தொடர்பில் ஆராயப்பட்டு விடுமோ என்ற அச்சமோ தெரியவில்லை மேலும் இராஜாங்க அமைச்சு இழக்கபட்டு விடும் எனும் பயத்தில் இந்த அரசுக்கும் இன்னமும் அமல் அவர்கள் அர்ச்சனை செய்து கொண்டு இருக்கின்றார்கள்.இவர்களால் முடிந்தால் ஒரு தமிழ் மக்களுக்கான நிரந்தர அபிவிருத்தியோ அல்லது நிரந்தர தீர்வோ பெற்றுக் கொடுக்க முடியுமா அவ்வாறு முடியாவிட்டால் அரசை விட்டு வெளியேறும்படி சவால் விடுகின்றோம்

Leave a Reply