6 வருடங்களின் பின் இலங்கைக்கு நேரடி விமான சேவை

இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான நேரடி விமான சேவை, 6 வருடங்களின் பின்னர் இன்று (01) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் (UL 564) இன்று திங்கட்கிழமை அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

1980 களில் இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான முதலாவது நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது.

அதன் பின்னர் 2015 இல், இந்த நேரடி விமானங்கள் நிறுத்தப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply