சுன்னாகம் ஐயனார் சமூக நலன் நோக்கு ஒன்றியம் அங்குரார்ப்பணம்!

சுன்னாகம் ஐயனார் சமூக நலன் நோக்கு ஒன்றியம், நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் ஐயனார் சமூக நலன் நோக்கு ஒன்றியம் நேற்றைய தினம் சுன்னாகம் ஐயனார் கோவில் திருமண மண்டபத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது

இந்நிகழ்வு, வலி தெற்கு பிரதேச சபையின் உறுப்பினர் பாலசிங்கம் சுரேஸ் குமாரின் நெறிப்படுத்தலில் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் பாலசிங்கம் சுரேஷ்குமார் தெரிவிக்கையில்,
எமது பிரதேசத்தில் நலிவுற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி மற்றும் கற்றல் செயற்பாடுகளை உதவிகளை வழங்குவதற்கு இவ்வாறான ஒரு அமைப்பு உருவாக்கப் படுவதன் மூலம் மக்களுக்கு சேவையாற்ற முடியும் நீண்ட காலமாக இந்த ஒன்றியம் அமைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் இருந்த போதிலும் அது கைகூடவில்லை.

எனினும், தற்போது இந்த ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு ஒன்றியமானது பிரதேச செயலகத்தில் பதிவு பதியப்பட்ட பின்னர் வேலைத் திட்டம் ஆரம்பமாக உள்ளது.

அத்தோடு குறித்த ஒன்றியத்தின் மூலம் சுன்னாகம் பகுதியிலுள்ள நலிவுற்ற மக்களுக்கு புலம்பெயர்ந்துள்ள உறவுகள் மற்றும் வர்த்தக பெருமக்களின் நிதி பங்களிப்புடன் தொடர்ச்சியாக உதவித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வுள்ளது.
குறித்த நிகழ்வில் சுன்னாகம் பகுதி மக்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை, ஒன்றியத்தில் உறுப்பினர்களாக அப்பகுதி சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவு செய்யப்பட்டதோடு கொள்கை விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply