தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தயாராகி வருகிறார் என வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கிளாஸ்கோ நகரில் நடக்கும் காலநிலை மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாடு திரும்பியதும் இந்தப் பேச்சு நடவடிக்கைகள் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில், இந்திய உயர்ஸ்தானிகரிடமும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் இது குறித்து வினவியபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அவ்வாறு ஓர் அழைப்பு இதுவரை கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதி சந்திப்பு ஜூன் 16 இற்கு திகதியிடப்பட்டிருந்தது. ஆனால், இச் சந்திப்பு நடைபெறவில்லை.
இதைத் தொடர்ந்து பஸில் ராஜபக்ஸ அமைச்சு பொறுப்பேற்ற பின்னர், பேச்சு நடக்கும் என உறுதியளித்தபோதும் பேச்சுக்கள் எவையும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது






