மீசாலையில் வீடு புகுந்து நகைகள் திருட்டு!

யாழ். மீசாலை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த திருட்டுக் கும்பல் சுமார் 9 பவுண் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

மீசாலை, பூதவராயர் கோவிலை அண்மித்த பகுதியில் தனிமையில் வாழும் பெண் ஒருவர் பாதுகாப்பு கருதி உறவினர் ஒருவரின் வீட்டில் இரவில் உறங்குவதற்கு சென்றுள்ளார்.

அதனை அவதானித்த திருட்டுக் கும்பல் அந்த பெண் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர், வீட்டை உடைத்து உட்புகுந்து சுமார் 9 பவுண் நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களை திருடியுள்ளதுடன், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சீ.சி.ரீ.வி கமராவின் சேமிப்பு தொகுதியும் தூக்கிச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

Leave a Reply