மருதமுனையில் நீரில் மூழ்கி உயிரிழந்த கிரிக்கெட் வீரர்

வாய்க்கால் நீரில் குளிக்கச் சென்ற 21 வயது இளைஞன் ஒருவர், நீரில் மூழ்கி மரணமாகியுள்ளார்.

மருதமுனை – பெரியநீலாவணை முஸ்லிம் வித்தியாலய வீதியில் வசித்து வந்த சுலைமான் லெப்பை சராப்கான் என்ற இளைஞனே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது நண்பர்களுடன் மத்திய முகாம் பிரதேசத்திலுள்ள வாய்க்காலில் நீராடச் சென்ற நிலையில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

குறித்த இளைஞன், திடீரென நீரில் மூழ்கியதை அவதானித்த நண்பர்கள், அயலவர்களின் உதவியுடன் மீட்டெடுத்து, மத்தி முகாம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

எனினும், இளைஞனுடைய உயிரை காப்பாற்ற முடியவில்லை.

உயிரிழந்த இளைஞன், மிகச் சிறந்த ஒரு கிரிக்கெட் வீரர் எனவும், மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டுக்கழக கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply