ஹாலி எல தெமோதர பகுதியில் ரயில் நிலையங்களுக்கு இடையில் மண்சரிவு மற்றும் கற்பாறை சரிந்து வீழ்ந்ததில் மலைநாட்டு ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் பதுளையிலிருந்து நானுஓயா நோக்கிப் பயணித்த ரயில் ஒன்று தடைப்பட்டுள்ளது.
மண் மற்றும் கல்லை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெமோதரை ரயில் நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.






