காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கெடுப்பதற்காக ஐக்கிய இராஜ்யத்தின் கிளாஸ்கோ சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தங்கியிருந்த ஹோட்டேலை இன்று சூழ்ந்துகொண்ட புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
மாநாட்டில் கலந்துகொள்ள வந்துள்ள பல உலகத் தலைவர்கள் கிளாஸ்கோ நகரில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் தங்கியிருக்கின்றார்கள்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவும் இந்த ஹோட்லிலேயே தங்கியிருக்கின்றார்.
இதனிடையே, இன்று அதிகாலை முதல் கோட்டாபயவுக்கு எதிராக கோசங்களை எழுப்பியபடி, தமிழ் மக்கள் ஹோட்லின் முன் திரண்டிருக்கின்றனர்.
ராஜபக்ச ஒரு போர் குற்றவாளி, மனித உரிமைகளை மீறுபவர், கொலையாளி என்று பல்வேறு கோசங்கள் எழுப்பியவாறு ராஜபக்சவுக்கு எதிராக பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் ஓயாத அலைகளாகத் தொடர்வதாகத் தெரிவிக்கின்றார்.
இப் போராட்டம், பல்வேறு உலகத் தலைவர்களினது கவனத்தை ஈர்த்து வருவதாகவும், இலங்கைக்கு ஜனாதிபதிக்கு இது பலத்த சங்கடங்களை விளைவித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.











