பொக்கனைப் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபரை, நேற்று (01) கோப்பாய் பொலிஸார் கைது செய்தனர்.
கோப்பாய் – பொக்கனைப் பகுதியில், கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாகப் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, குறித்த இடம் பொலிஸாரால் முற்றுகை இடப்பட்டது.
இதன்போது கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கோடா மற்றும் 20 லீட்டருக்குக்கும் மேற்பட்ட கசிப்பு கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






