எதிர்வரும் மாதங்களில் தொற்று அதிகரிக்கும்!

எதிர்வரும் மாதங்களில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை நிச்சயமாக அதிகரிக்கும் என்று சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் சுகாதார அமைச்சின் குடும்ப மருத்துவ ஆலோசகரான மருத்துவர் மல்காந்தி கல்ஹேன தெரிவிக்கையில்,

தற்போது மக்கள் வெளியிடங்களுக்குச் செல்லும்போது பொறுப்பற்ற முறையில் செயற்பட ஆரம்பித்துள்ளனர். சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் நடைமுறைகள் புறக்கணிக்கப்படுகின்றன.

பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது மற்றும் செயற்பாடுகளில் பங்கேற்கும்போது, சுகாதார வழிகாட்டல்களை மக்கள் நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும். இல்லையெனில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பைத் தவிர்க்க முடியாது.- என்றார்.

Leave a Reply