பஸில் அரசிலுக்கு நான் தான் முடிவு கட்டுவேன் – ஹரின் சூளுரை

ஊவாவில் சசீந்திர ராஜபக்சவை வீழ்த்தினேன். கம்பஹாவில் பஸில் ராஜபக்சவுக்கும் சவால் விடுப்பேன். அவரின் அரசிலுக்கு நான்தான் முடிவு கட்டுவேன்

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்டத்துக்குட்பட்ட வத்தளை தொகுதிக்கான அலுவலகம் நேற்று திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

பதுளை மாவட்ட மக்கள் மீது ஏற்பட்ட கோபத்தால் நான் கம்பஹாவுக்கு வரவில்லை. இன்னும் 10 ஆண்டுகள்தான் அரசியல் செய்வேன்.

அந்தக் காலப்பகுதிக்குள் தேசிய மட்டத்தில் அரசியலில் ஈடுபடவேண்டும். மிகப்பெரிய பதவிகளுக்குப் போட்டியிட வேண்டும்.

ஊவாவில் சசிந்திர ராஜபக்சவை வீழ்த்தினேன். தற்போது கம்பஹா மாவட்டத்துக்கு வந்துள்ளேன்.

இனி பஸில் ராஜபக்சவுடனும் அரசியல் ரீதியில் மோதுவேன். அவரின் அரசிலுக்கு முடிவுகட்டியே தீருவேன்– என்றார்.

Leave a Reply