யாழ் நகரை நேரில் சென்று பார்வையிட்ட வடமாகாண ஆளுநர்

யாழ் மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களை, ஆளுநர் ஜீவன் தியாகராஜா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் , ஏனைய அபிருத்தி நடவடிக்கைகள், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திகள் பற்றி ஆராய்ந்துள்ளார்.

இதன்போது யாழ் மாவட்ட அரச அதிபர் க.மகேசன், யாழ் பிரதேச செயலாளர் மற்றும் அரச உத்தியோகத்தர்களுடன் நிலமை குறித்து கலந்துரையாடினார்.

Leave a Reply