மல்லாவியில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!

யாழ்ப்பாணம், மல்லாவி பழைய பேருந்து தரப்பிட முன்றலில் அதிபர், ஆசிரியர்கள் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

நாளை புதன்கிழமை 1.30 மணியளவில் இப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இப்போராட்டத்தில், ஆசிரியர்கள், அதிபர்களுடன் பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகளும் ஈடுபடவுள்ளனர்.

ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கக் கோரியும், இலவசக் கல்வி உரிமையை உறுதிப்படுத்தக் கோரியும் இப்போராட்டம் நடைபெறவுள்ளது.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இப் போராட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply