இன்றைய தினம் வேலைநிறுத்தம் இடம்பெறாது என இலங்கை மின்சார சபையின் ஐக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு அழைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
அனைத்து மின்சார சபை ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, இலங்கை மின்சார சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
எனினும், பராமரிப்புச் சேவையில் இருக்கும் ஊழியர்களை தாம்இ கொழும்புக்கு அழைப்பதாகத் தெரிவித்தார்.
அனல்மின் நிலையங்களில் கடமையாற்றும் அத்தியாவசியப் பணியாளர்கள் மற்றும் அவசர பராமரிப்புப் பணிகளில் ஈடுபடுபவர்களை தமது தொழிற்சங்கம் அழைக்காது என்றும் தெரிவித்தார்.
‘கோட்பாட்டின் படி, மின் நிலையங்களில் நாங்கள் இல்லாமல், நிலையான மின்சாரம் வழங்க வழி இல்லை என்பதை அறிவோம்’ என்று சுட்டிக்காட்டினார்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு முன்னர், ஆயிரம் தடவைக்கு மேல் ஆலோசித்து வருவதாகவும் இன்றைய தினத்துக்குப் பின்னர், ஒரு நாள் நிர்ணயம் செய்யப்படும்- என்றார்.






