நாட்டில் தற்போது நாளாந்தம் 500 இற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். சில இடங்களில் தொற்று வீதம் அதிகரித்துள்ளது. எனவே, மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். சுகாதார நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.
- இவ்வாறு இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொரோனா வைரஸுக்கு எதிரான போரை வெற்றிகொள்வதற்கு நாட்டு மக்களின் ஒத்துழைப்பே மிகவும் அவசியம்.
மக்கள் முகக்கவசம் அணிகின்றனரா, வீடுகளில் ‘பார்ட்டி’ நிகழ்வு இடம்பெறுகின்றதா என்பதை அரசு வந்து தேடிக்கொண்டிருக்க முடியாது.
எனவே, மக்கள் பொறுப்புடன் செயற்பட்டு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – என்றார்.
அதேவேளை, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுமாறும், பயணங்களை மட்டுப்படுத்திக்கொள்ளுமாறும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் அறிவுறுத்தியுள்ளார்.






