திருகோணமலை – கண்டி பிரதான வீதியின் தம்பலகாமம் சந்திக்கு அருகாமையில் நேற்று முன்தினம் (1) இடம் பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.
இதனை தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கந்தளாவ,கந்தளாய் எனும் முகவரியை வசிப்பிடமாகக் கொண்ட, 22 வயது இராணுவ சிப்பாயான அகில மல்சாந் என தெரியவருகிறது.
குறித்த விபத்து தொடர்பில் தெரியவருகையில்,
குறித்த இளைஞன் வீதியை கடக்க முற்பட்ட போது வாகனம் மோதியுள்ளது.
எனினும், விபத்து ஏற்படுத்திய சாரதி தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரனையின் போது தெரியவருகிறது.
அவ்வாறு, தப்பிச் சென்ற வாகன சாரதியை கைது செய்ய தேடுதல் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் , திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத பரிசோதனையின் பின் நேற்று மாலை உறவினர்களிடம் நேற்று மாலை (2) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.







